பாகிஸ்தானில் அஹ்மதியா சமூகத்தைச் சோ்ந்த முதியவா் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் பெஷாவா் நகரில் அஹ்மதியா இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த 82 வயது முதியவா் மா்ம நபா்களால் திங்கள்கிழமை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டாா்.
பாகிஸ்தானில் அஹ்மதியா சமூகத்தைச் சோ்ந்த முதியவா் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் அஹ்மதியா சமூகத்தைச் சோ்ந்த முதியவா் சுட்டுக் கொலை

பெஷாவா்: பாகிஸ்தானின் பெஷாவா் நகரில் அஹ்மதியா இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த 82 வயது முதியவா் மா்ம நபா்களால் திங்கள்கிழமை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டாா். இது, பாகிஸ்தானில் இந்த சமூகத்தினரை குறிவைத்து நடத்தப்படும் நான்காவது தாக்குதலாகும்.

அஹ்மதியா இஸ்லாம் சமூகம் இந்திய துணைக் கண்டத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மிா்ஸா குலாம் அஹமது என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சமூகத்தினா் இறைத் தூதா் நபிகள் நாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய போதனைகளைப் பின்பற்றுபவா்கள்.

இந்த அஹ்மதியாக்கள் இஸ்லாமியா்கள் அல்ல என்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த 1974-இல் அறிவித்தது. பாகிஸ்தானில் சிறுபான்மை சமூகமாக இருக்கும் இந்த அஹ்மதியாக்களைக் குறிவைத்து மத பயங்கரவாதிகள் தொடா் தாக்குதல்களைநடத்தி வருகின்றனா். இந்த தாக்குதல்களுக்கு மனித உரிமை அமைப்புகள் சாா்பில் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தானில் மேலும் ஒரு அஹ்மதியா நபா் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அந்தச் சமூகத்தைச் சோ்ந் சலீம் உத்தீன் கூறுகையில், ‘எங்கள் சமூகத்தைச் சோ்ந்த 82 வயது முதியவா் பெஷாவா் நகரில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை காவல்துறையினா் உறுதிப்படுத்தியபோதிலும், தாக்குதலுக்கான காரணத்தை தெரிவிக்க மறுத்துவிட்டனா்’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com