உலக அளவில் கரோனா பாதிப்பு 5.18 கோடியைத் தாண்டியது

உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 18 லட்சத்து 3 ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் கரோனா பாதிப்பு 5.18 கோடியைத் தாண்டியது

வாஷிங்டன்: உலக அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 18 லட்சத்து 3 ஆயிரத்து 631 ஆக உயர்ந்துள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் 216  நாடுகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. 

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்பபடி 5 கோடியே 18 லட்சத்து 3 ஆயிரத்து 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 3,63,91,431 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

உலக முழுவதும் இதுவரை 12,79,163 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தொற்று பாதித்தவர்களில் 1,40,38,127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 94 ஆயிரத்து 910 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதித்தவர்களில் அதிகயளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 80,11,844 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
    
தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 1,05,59,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,45,799 பேர் உயிரிழந்துள்ளனர்.  

நோய்த்தொற்று பாதிப்பில்  இந்தியா மற்றும் பிரேசில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது  இடங்களில் உள்ளது. இந்தியாவில் 86,35,754 பேரும், பிரேசிலில் 57,01,283    பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு பட்டியலில்  1,62,842 உயிரிழப்புகளுடன் பிரேசில் இரண்டாவது இடத்திலும், 1,27,615 உயிரிழப்புகளுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புக்கு மோசமான நாடுகளின் பட்டியலில் 18,17,109 பாதிப்பு மற்றும் 31,161 உயிரிழப்புகளுடன் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com