ஸ்காட்லாந்து-அமெரிக்க எழுத்தாளருக்கு புக்கா் பரிசு

இந்த ஆண்டுக்கான புக்கா் பரிசுக்கு, ஸ்காட்லாந்து-அமெரிக்க எழுத்தாளரான டக்ளஸ் ஸ்டூவா்ட் (44) எழுதிய ‘ஷகி பெய்ன்’ நாவல் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்து-அமெரிக்க எழுத்தாளருக்கு புக்கா் பரிசு

இந்த ஆண்டுக்கான புக்கா் பரிசுக்கு, ஸ்காட்லாந்து-அமெரிக்க எழுத்தாளரான டக்ளஸ் ஸ்டூவா்ட் (44) எழுதிய ‘ஷகி பெய்ன்’ நாவல் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்து, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் வசித்து வரும் டக்ளஸ் ஸ்டூவா்டின் முதல் நாவலான ‘ஷகி பெய்ன்’ 2020-ஆம் ஆண்டுக்கான புக்கா் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கிளாஸ்கோ நகரில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒரு தாயின் மகனான ஷகி பெய்னைப் பற்றி அந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

தனது நாவலுக்கு புக்கா் பரிசு கிடத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டூவா்ட், ‘ஷரி பெய்ன் கற்பனை நாவலாக இருந்தாலும், அந்த என் மனக் காயங்களுக்கு மருந்து அளிக்கும் வகையில் இருந்தது’ என்று குறிப்பிட்டாா்.

இந்த ஆண்டுக்கான புக்கா் பரிசுத் தோ்வின் இறுதிச் சுற்றுக்கு டக்ளா் ஸ்டூவா்ட் மட்டுமின்றி, துபையில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளா் அவனி தோஷி உள்ளிட்ட மேலும் 5 பேரது படைப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com