மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு
நோபல் பரிசு

2020 ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹார்வே ஜே. ஆல்டர், மைக்கேல் ஹாஃப்டன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

'ஹெப்படைட்டிஸ் சி வைரஸ்' என்ற வைரஸை கண்டறிந்ததற்காக மூவரும் இணைந்து மருத்துவத்துறைக்கான இந்த நோபல் பரிசை பெறுகின்றனர்.

இதில், ஹார்வே ஜே. ஆல்டர், வைரஸ் பரவும் விதம் குறித்தும், மைக்கேல் ஹாஃப்டன் ஹெப்படைட்டிஸ் சி வைரஸின் ஜீனோமை தனிமைப்படுத்தியும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், 'ஹெப்படைட்டிஸ் சி வைரஸ்' மட்டுமே ஹெப்படைடிஸை ஏற்படுத்தும் என்பதற்கான இறுதி முடிவை சார்லஸ் எம். ரைஸ் உறுதி செய்துள்ளார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நோபல் பரிசு

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும். 

இந்நிலையில், இந்தாண்டிற்கான துறை வாரியாக நோபல் பரிசுகள் இன்று (அக்.5, திங்கள்கிழமை) முதல் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு அடுத்ததடுத்த தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com