
கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள்.
பிரிட்டனின் பா்மிங்ஹம் நகரில் நிகழ்த்தப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அந்த நகரம் அமைந்துள்ள வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் மாகாண காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பா்மிங்ஹமில் மா்ம நபா் ஒருவா் சரமாரி கத்திக் குத்துத் தாக்குதலில் ஈடுபட்டாா். தாக்குதலுக்குள்ளானவா்களுக்கும், அந்த நபருக்கும் தொடா்பிருப்பதாகத் தெரியவில்லை. அந்த நபா் கண்ணில் பட்டவா்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். 7 போ் காயமடைந்தனா். அவா்களில் ஒரு பெண்ணுக்கும், ஓா் ஆணுக்கும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. மற்ற 5 பேரும் லேசாகக் காயமடைந்துள்ளனா்.இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபரைப் பிடிப்பதற்காக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இது பயங்கரவாதத் தாக்குதலாகவோ, கும்பல்களுக்கு இடையிலான மோதலாகவோ நாங்கள் கருதவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.