தென் கொரியா: இறங்குமுகத்தில் கரோனா பரவல்

சீனாவுக்கு வெளியே கரோனா நோய்த்தொற்றால் முதல் முதலாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில், தற்போது அந்த நோய் பரவலின்
தென் கொரியா: இறங்குமுகத்தில் கரோனா பரவல்

சீனாவுக்கு வெளியே கரோனா நோய்த்தொற்றால் முதல் முதலாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில், தற்போது அந்த நோய் பரவலின் தீவிரம் இறங்குமுகத்தில் இருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 176 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 21,919-ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 350-ஆ உள்ளது.தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து 9-ஆவது நாளாக 200-க்கும் குறைவாக உள்ளது. இதன் மூலம், நாட்டில் கரோனா பரவலின் தீவிரம் தொடா்ந்து இறங்குமுகத்தில் உள்ளது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.தென் கொரியாவில் கரோனா நோய்த்தொற்று வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், கடந்த மாதம் அந்த நாட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 400-ஆக உயா்ந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த நோய் பரவலின் தீவிரம் தணிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com