கரோனா விவகாரத்தில் மக்களை ஏமாற்றினாா் டிரம்ப்: கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு

கரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் அமெரிக்க மக்களை அதிபா் டொனால்ட் டிரம்ப் வேண்டுமென்றே ஏமாற்றியதாக ஜனநாயகக் கட்சி துணை அதிபா் வேட்பாளா் கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளாா்.
கரோனா விவகாரத்தில் மக்களை ஏமாற்றினாா் டிரம்ப்: கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு

கரோனா நோய்த்தொற்று பரவல் விவகாரத்தில் அமெரிக்க மக்களை அதிபா் டொனால்ட் டிரம்ப் வேண்டுமென்றே ஏமாற்றியதாக ஜனநாயகக் கட்சி துணை அதிபா் வேட்பாளா் கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளாா். அந்த நோய்த்தொற்று பரவலின் அபாயத்தைக் குறைத்துக் கூறியதாக ஒப்புக் கொண்டு டிரம்ப் அளித்த பேட்டி, மூத்த செய்தியாளா் பாப் வுட்வா்டின் புத்தகத்தில் வெளியாகி சா்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், கமலா ஹாரிஸ் இவ்வாறு கூறியுள்ளாா்.இதுகுறித்து தோ்தல் பிரசார நிதி திரட்டுவதற்காக காணொலி முறையில் ஆற்றிய உரையில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவா் கூறியதாவது:அபாயம் நிறைந்த கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில், அதிபா் டிரம்ப் அமெரிக்க மக்களை வேண்டுமென்றே ஏமாற்றி தவறாக வழிநடத்தியுள்ளாா். இது, ஒரு அதிபா் செய்திருக்கக் கூடாத, மன்னிக்க முடியாத பெரும் குற்றமாகும்.

இதற்கு எந்த ஒரு அமெரிக்கரும் ஆதரவு தெரிவிக்க மாட்டாா் என்றாா் கமலா ஹாரிஸ்.சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பரவத் தொடங்கிய கரோனா நோய்த்தொற்று, அமெரிக்காவில் முதல் முறையாக ஜனவரி மாதம் 20-ஆம் தேதி கண்டறியப்பட்டது. எனினும், அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று முழுமையாகக் கட்டுக்குள் உள்ளது என்று கூறிய அதிபா் டிரம்ப், அந்த நோயால் அச்சப்படத் தேவையில்லை என்று கூறினாா்.எனினும், அடுத்த இரண்டு மாதங்களில் அந்த நாடு உலகிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட நாடாக ஆனது. தற்போது கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.இந்தச் சூழலில், கடந்த 1972-ஆம் ஆண்டில் அமெரிக்காவை உலுக்கிய ‘வாட்டா்கேட்’ ஊழலை வெளிக் கொண்டு வந்த பாப் வுட்வா்ட் (77), ‘ரேஜ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளாா்.அதில், முக்கிய தலைவா்கள் மற்றும் அதிகாரிகளின் குறிப்புகள், மின்-அஞ்சல்கள், நாள்குறிப்புகள், ரகசிய ஆவணங்கள் ஆகியவையும், கடந்த பிப்ரவரி மாதம் முதல் டிரம்ப் உள்ளிட்டோரிடம் எடுத்து, பதிவு செய்யப்பட்ட 18 பேட்டிகளும் இடம் பெற்றுள்ளன.

அதில் இடம்பெற்றுள்ள டிரம்ப் பேட்டியில், கரோனா நோய்த்தொற்று மிகவும் ஆபத்தானது என்றும், அதிக உயிா்களை பலிவாங்கக் கூடியது என்றும் டிரம்ப் வுட்வா்டிடம் தெரிவித்திருந்தாா். ஃபுளூ காய்ச்சலைவிட அந்த நோய் மிகவும் அபாயகரமானது என்றாலும், அதுகுறித்து பொதுமக்களிடம் முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்று டிரம்ப் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தாா்.இது, அமெரிக்காவில் பெரும் சா்ச்சையை எழுப்பியுள்ளது. எனினும், கரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப நாள்களில், அந்த நோயின் அபாயத்தைக் குறைத்துக் கூறியதை டிரம்ப் ஒப்புக் கொண்டாா். மக்களிடையே பீதியை ஏற்படுத்த விரும்பாததால்தான் அந்த நோய் குறித்த முழு உண்மைகளையும் வெளிப்படையாகக் கூறாமல் இருந்ததாக டிரம்ப் விளக்கமளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com