
கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை
உலகளவில் இதுவரை கரோனா தொற்று பாதித்தவர்களில் 2,41,73,040 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3.27 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள, ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு கோடிக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். சனிக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,27,58,989 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,93,435 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதித்த 3,27,58,989 கோடி பேரில் 2,41,73,040 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 75,92,514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 63,783 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
உலகளவில் கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 72,44,184 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 208,440 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து தொற்று பாதிப்பில் 59,01,571பாதிப்புகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் நாட்டின் இறப்பு எண்ணிக்கை 93,410 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசில் (4,692,579), ரஷ்யா (1,136,048), கொலம்பியா (798,317), பெரு (794,584), மெக்ஸிகோ (720,858), ஸ்பெயின் (735,198), அர்ஜென்டினா (691,235), தென்னாப்பிரிக்கா (668,529), பிரான்ஸ் (513,034), சிலி (453,868), ஈரான் (439,882), இங்கிலாந்து (423,236), பங்களாதேஷ் (356,767), ஈராக் (341,699) மற்றும் சவுதி அரேபியா 332,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலில் தற்போது வரை 140,709 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்ஸிகோ (720,858), இங்கிலாந்து (41,936), இத்தாலி (35,801), பெரு (32,037), பிரான்ஸ் (31,661), ஸ்பெயின் (31,232), ஈரான் (25,222), கொலம்பியா (25,103), ரஷ்யா (20,056), தென்னாப்பிரிக்கா (16,312), அர்ஜென்டினா (15,208), சிலி (12,527), ஈக்வடார் (11,236) மற்றும் இந்தோனேசியாவில் 10,218 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...