சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

வங்கதேசம்: ரோஹிங்கயாக்களுக்கு கரோனா தடுப்பூசி

மியான்மரிலிருந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி முதல்முறையாக செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 7:18 pm

DIN

மியான்மரிலிருந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி முதல்முறையாக செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

அந்த நாட்டு அரசும் தன்னாா்வ தொண்டு அமைப்புகளும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ள முகாம்களில் இந்தப் பணி தொடங்கப்டடது.

34 அகதிகள் முகாம்கள் அமைந்துள்ள காஸ் பஜாா் பகுதியில் மட்டும் இதுவரை சுமாா் 20,000 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவா்களில் 200 போ் பலியாகியுள்ளனா்.

ரோஹிங்கயா அகதிகள் முகாம்களில் மிகவும் நெருக்கமாக தங்கவைக்கப்பட்டுள்ளதால் அங்கு கரோனா பரவல் மிக அதிகமாக இருப்பதாக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அங்கு மற்ற பகுதிகளைவிட மிக அதிகமாக கரோனா பரவல் விகிதம் 30 சதவீதமாக இருப்பதாக அந்த அமைப்புகள் கூறியுள்ளன.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, வங்கதேசத்தில் 13,76,322 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 23,161 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 12,34,762 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 1,18,399 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 1,434 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.