ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைப்பு: பிரிக்ஸ் நாடுகள் ஒப்பந்தம்

ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் தரவு பகிர்வில் ஒத்துழைப்பு நல்கும் வகையில் பிரிக்ஸ் நாடுகளிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் தரவு பகிர்வில் ஒத்துழைப்பு நல்கும் வகையில் பிரிக்ஸ் நாடுகளிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் தரவு பகிர்வில் ஒத்துழைப்பு நல்கும் வகையில் பிரிக்ஸ் நாடுகளிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின் குறிப்பிட்ட ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள்களை இணைய வழியில் தொகுதியாக ஒருங்கிணைக்க இந்த ஒப்பந்தம் செயல்வடிவம் கொடுத்துள்ளது. இதன் மூலம், அந்தந்த நிலையங்களுக்கு தரவுகள் சென்றடையும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், "காலநிலை மாற்றம், பேரிடர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான பலதரப்பட்ட ஒத்துழைப்பை இது மேலும் வலுப்படுத்தும்" எனக் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரோ தலைவர் கே. சிவன், சீன தேசிய விண்வெளி அமைப்பின் நிர்வாகி ஜாங் கெஜியன், தென்னாப்பிரிக்கா தேசிய விண்வெளி அமைப்பின் தலைமை செயல் அலுவலர் வளநாதன் முன்சாமி உள்ளிட்டோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com