'அடையாளங்களை அழித்து விடுங்கள்' - ஆப்கன் கால்பந்து வீராங்கனைகளுக்கு கேப்டன் வலியுறுத்தல்

கால்பந்து வீராங்கனைகள், தங்களுடைய புகைப்படங்களை நீக்குங்கள், சீருடையை எரித்துவிடுங்கள் என ஆப்கானிஸ்தான் மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் கலிடா போபால் தெரிவித்துள்ளார். 
கலிடா போபால்
கலிடா போபால்
Updated on
1 min read

கால்பந்து வீராங்கனைகள், தங்களுடைய புகைப்படங்களை நீக்குங்கள், சீருடையை எரித்துவிடுங்கள் என ஆப்கானிஸ்தான் மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் கலிடா போபால் தெரிவித்துள்ளார். 

கோபன்ஹேகனைச் சேர்ந்த ஆப்கானிஸ்தான் மகளிர் கால்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் கலிடா போபால் புதன்கிழமை காணொலி மூலமாக ராய்ட்டர்ஸிடம் பேசினார். 

அப்போது அவர், 'கடந்த காலங்களில் தீவிரவாதிகள் பெண்களைக் கொன்றனர், பாலியல் வன்கொடுமை செய்தனர், கல்லால் அடித்தனர். தற்போது மீண்டும் அவர்களின் ஆட்சியில் பெண்களின் நிலைமை, பெண்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை' என்கிறார். 

ஆப்கானிஸ்தான் மகளிர் கால்பந்து லீக்கின் இணை நிறுவனரான கலிடா, அணி வீராங்கனைகளிடம், 'இன்னும் வலுவாக இருங்கள், தைரியமாக இருங்கள்' என்று கூறியவர், இன்று அவர்களின் அடையாளங்களை அழிக்கச் சொல்கிறார். 

'கால்பந்து வீராங்கனைகள், தங்களுடைய புகைப்படங்களை நீக்குங்கள், சீருடையை எரித்துவிடுங்கள், சமூக வலைதளங்களை நீக்கி பொது அடையாளங்களை அழித்து விடுங்கள், பாதுகாப்பிற்காக தங்கள் விளையாட்டு பொருள்களை எரிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பேசிய அவர், 'இது எனக்கு மகிவும் வேதனையாக இருக்கிறது. ஒரு சமூக ஆர்வலராக நின்று, ஒரு தேசிய மகளிர் கால்பந்து அணியை வழிநடத்தினேன். ஒவ்வொருவரும் மார்பில் அந்த பேட்ஜை அணியவும், விளையாடவும் எங்கள் நாட்டை பிரதிநித்துவப்படுத்தவும் உரிமை பெற எவ்வளவு பாடுபட்டோம். 

இப்போது எந்த நேரத்திலும் கதவு தட்டப்படும் என்று எங்கள் பெண்கள் மிகவும் பயப்படுகிறார்கள். கவலைப்படுகிறார்கள். ஆபத்து நேர்ந்தால் பாதுகாப்புக்கு யாரும் இல்லை. ஒரு நாடு இடிந்து விழுவதை நாங்கள் பார்க்கிறோம்' என்றார். 

உலக கால்பந்து அமைப்பு வளர்ந்து வரும் சூழ்நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கவலை மற்றும் அனுதாபத்தை பகிர்ந்து கொள்வதாக ஃபிஃபாவின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com