
பயனர்களின் தனியுரிமை விதிகளை மீறியதாக 106 செயலிகளை சீன ஆஃப் ஸ்டோரிலிருந்து நீக்க அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீன நாட்டில் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு பதிலாக சீன ஆப்ஸ் ஸ்டோர் பயன்பாட்டில் உள்ளது. செல்போன் பயனர்கள் தங்களது செல்போனுக்கு தேவையான ஆப்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள இதனை உபயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில் சீன ஆப் ஸ்டோரின் பயனர் தனியுரிமை விதிகளை மீறியதாகக் கூறி டெளபன், சஞ்பா கரோக்கி, ஐஹுசூ உள்ளிட்ட 106 ஆப்களை நீக்கி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.