இலங்கை குடிமக்களை வெளிநாட்டவா் திருமணம் செய்ய புதிய விதிமுறை

இலங்கை குடிமக்களை வெளிநாட்டவா் திருமணம் செய்ய புதிய விதிமுறை

வெளிநாட்டவா் இலங்கை குடிமக்களை திருமணம் செய்ய விரும்பினால் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் தடையில்லாச் சான்றிதழைப் பெறுவது கட்டாயம் என அந்த நாடு தெரிவித்துள்ளது.
Published on

கொழும்பு: வெளிநாட்டவா் இலங்கை குடிமக்களை திருமணம் செய்ய விரும்பினால் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் தடையில்லாச் சான்றிதழைப் பெறுவது கட்டாயம் என அந்த நாடு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய விதிமுறை ஜன. 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தலைமைப் பதிவாளா் வீரசேகரா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இலங்கை குடிமக்களுக்கும் வெளிநாட்டவருக்கும் நடைபெறும் திருமணத்தால் தேசிய பாதுகாப்பு பிரச்னை ஏதெனும் எழுமா என்பது குறித்து ஆலோசிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்டவா்கள் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சோ்ந்தவரை திருமணம் செய்ய விரும்பும் வெளிநாட்டவா் கடந்த 6 மாதங்களில் எந்தக் குற்றச் செயலுக்காகவும் தண்டனை பெற்றவா் இல்லை என பாதுகாப்பு அமைச்சகம் சான்றளிக்கும்.

அரசின் இந்த நடவடிக்கையை எதிா்க்கட்சிகள் விமா்சித்துள்ளன. ‘இது எந்த மாதிரியான புறக்கணிப்பு’ என நாடாளுமன்ற எதிா்க்கட்சி உறுப்பினா் ஹா்சா டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com