
கரோனா வைரஸ் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள சீனா சென்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு வூஹான் நகரத்தில் உள்ள விலங்குகள் சுகாதார மையத்தை ஆய்வு செய்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய கரோனா தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவின் வூஹான் நகரத்தை அடைந்த உலக சுகாதார நிறுவனத்தின் 10 பேர் கொண்ட ஆய்வுக் குழு ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொற்று தொடங்கிய சந்தைப் பகுதி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இந்தக் குழு ஹூபே மாகாணத்தில் ஆய்வு மேற்கொண்டது. விலங்குகள் சுகாதார மையத்தில் ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து மேலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.