இந்தோனேசியாவில் பயணிகள் விமானத்தை காணவில்லை

இந்தோனேசியாவில் 62 பேருடன் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானத்தை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவில் பயணிகள் விமானத்தை காணவில்லை
இந்தோனேசியாவில் பயணிகள் விமானத்தை காணவில்லை
Updated on
1 min read

இந்தோனேசியாவில் 56 பயணிகள் உள்பட 62 பேருடன் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானத்தை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானத்துடனான தகவல் தொடர்பு பிற்பகல் 2.40 மணிக்குத் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.
 போயிங் 737 ரக விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினர், விமானம் காணாமல் போன இடத்திலிருந்து விமானத்தின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்திருப்பதாகவும் அது காணாமல் போன விமானத்தின் பாகங்கள்தானா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், காணாமல் போன விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கக் கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

விமானத்தில் 46 பெரியவர்கள், 7 சிறுவர்கள், 3 குழந்தைகள் உள்பட 56 பேர் பயணிகளுடன் விமானப் பணியாளர்களும் சேர்த்து 62 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com