பெய்ரூட் வெடிவிபத்து: 3 பேருக்கு இன்டர்போல் நோட்டீஸ்

லெபனான் தலைநகா் பெய்ரூட்  துறைமுகத்தில் கடந்த வருடம் நிகழந்த வெடிவிபத்து தொடர்பாக 3 பேருக்கு இன்டர்போல் அமைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
பெய்ரூட் வெடிவிபத்து: 3 பேருக்கு இன்டர்போல் நோட்டீஸ்
பெய்ரூட் வெடிவிபத்து: 3 பேருக்கு இன்டர்போல் நோட்டீஸ்

லெபனான் தலைநகா் பெய்ரூட்  துறைமுகத்தில் கடந்த வருடம் நிகழந்த வெடிவிபத்து தொடர்பாக 3 பேருக்கு இன்டர்போல் அமைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 200 பேர் வரை பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். 

மோல்டோவாவைச் சோ்ந்த எம்வி ரோசுஸ் என்ற சரக்குக் கப்பல், ரசயான உரமாகவும், வெடிபொருளாகவும் பயன்படுத்தக்கூடிய 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டை ஏற்றிக் கொண்டு ஜாா்ஜியாவிலிருந்து மொஸாம்பிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு சென்று கொண்டிருந்த கப்பலில் பழுது ஏற்பட்டதால், அது பெய்ரூட் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையே, அந்தக் கப்பல் உரிமையாளா் திவால் ஆகிவிட்டதால், அதனை அவா் கைவிட்டாா். அதையடுத்து, அந்தக் கப்பலில் இருந்த அமோனியம் நைட்ரோட் கன்டெய்னா்கள் துறைமுகக் கிடங்கில் 6 ஆண்டுகளுக்கும் மேல் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அந்தக் கிடங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு ரஷியர்களுக்கும் ஒரு போர்ச்சுகீசியருக்கும் இன்டர்போல் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் பெய்ரூட் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலின் முன்னாள் கேப்டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com