

அமெசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பெசோஸ் (57) ராக்கெட்டில் விண்வெளிக்குச் செல்வதற்கு அமெரிக்க விமானப் போக்குவரத்து நிா்வாகம் திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
அமெரிக்காவை சோ்ந்த விா்ஜின் கலாக்டிக் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளா் ரிச்சா்ட் பிரான்ஸன், அவரது நிறுவனம் தயாரித்த ராக்கெட் விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்வெளிக்குச் சென்று வந்தாா். அவருடன் இந்திய வம்சாவளியை சோ்ந்த ஸ்ரீஷா பண்ட்லா உள்ளிட்ட 5 பேரும் அந்த விண்வெளிப் பயணத்தில் இடம்பெற்றனா். அடுத்த ஆண்டுமுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல பிரான்ஸனின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதேபோல், ஜெஃப் பெசோஸின் ‘ப்ளூ ஒரிஜின்’ என்ற நிறுவனமும் விண்வெளி சுற்றுலாவில் தடம்பதிக்க முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக இந்த நிறுவனம் தயாரித்துள்ள ராக்கெட் மூலம் ஜூலை 20-ஆம் தேதி ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்குச் செல்லவுள்ளாா். அவரது சகோதரா் உள்பட மேலும் 3 பேரும் அவருடன் செல்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.