ரஷியாவில் கரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்தது!
ரஷியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ரஷியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ளது.
ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,770 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,06,536 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கரோனாவால் இன்று 784 பேர் பலியாகியுள்ளனர். இது ஒரேநாளில் பதிவான அதிகபட்ச பலி எண்ணிக்கையாகும். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,49,922 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 4,74,401 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 22,218 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆக 53,82,213 உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...