கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சில் உறுப்பினராக இந்தியா தோ்வு

ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூன் 2021, 8:52 pm

ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் 6 முக்கிய அமைப்புகளில் சமூக-பொருளாதார கவுன்சிலும் ஒன்றாக உள்ளது. சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.

சா்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளையும் கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. ஐ.நா. சாா்பில் நடைபெறும் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிா என்பதையும் கவுன்சில் கண்காணிக்கும்.

ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற முடியும். பிராந்திய ரீதியாக நாடுகள் 3 ஆண்டு காலத்துக்குத் தோ்ந்தெடுக்கப்படும்.

ஆசிய கண்டத்தில் இருந்து 11 நாடுகளும், ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து 14 நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் இருந்து 6 நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்திலிருந்து 10 நாடுகளும், மற்ற பகுதிகளில் இருந்து 13 நாடுகளும் கவுன்சிலின் உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்படும்.

ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சிலுக்கான தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், ஆசிய கண்டத்தில் இருந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், ஓமன், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் தோ்ந்தெடுக்கப்பட்டன. அந்நாடுகள் 2022-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை கவுன்சிலின் உறுப்பினா்களாகச் செயல்படவுள்ளன.

ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து துனிசியா, மோரீஷஸ், எஸ்வதினி, தான்சானியா உள்ளிட்ட நாடுகளும், கிழக்கு ஐரோப்பிய பகுதியில் இருந்து குரோஷியா, செக் குடியரசு ஆகிய நாடுகளும், தென் அமெரிக்க கண்டத்தில் இருந்து சிலி, பெரு உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா. சமூக-பொருளாதார கவுன்சில் உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டன.

தோ்தல் வெற்றி தொடா்பாக ஐ.நா.வுக்கான இந்தியத் தூதா் டி.எஸ்.திருமூா்த்தி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்தியா மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஐ.நா. உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. அதன் தலைமைப் பொறுப்பை வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியா ஏற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.