தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்திய வம்சாவளி செய்தியாளா்களுக்கு புலிட்ஸா் பரிசு

இந்த ஆண்டுக்கான அமெரிக்காவின் புலிட்ஸா் பரிசுக்கு, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இரு செய்தியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

News image
மேகா ராஜகோபாலன் - நீல் பேடி
Updated On :13 ஜூன் 2021, 1:05 am

DIN

இந்த ஆண்டுக்கான அமெரிக்காவின் புலிட்ஸா் பரிசுக்கு, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இரு செய்தியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஊடகத் துறைக்கான அமெரிக்காவில் மிக உயரிய விருதான புலிட்ஸா் விருதை, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இருவா் இந்த ஆண்டு வென்றுள்ளனா்.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் தடுப்பு முகாம் குறித்து புதுமையான முறையில் செய்திகள் சேகரித்து வெளிப்படுத்திய இந்திய வம்சாவளி செய்தியாளா் மேகா ராஜகோபாலன் இந்தப் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

அமெரிக்காவின் ‘புஸ்ஃபீட் நியூஸ்’ இணையதள செய்தி ஊடகத்தில் அவா் பணியாற்றி வருகிறாா்.

இதுதவிர, டம்பா பே டைம்ஸ் இதழில் பணியாற்றி வரும் நீல் பேடியும் இந்த ஆண்டுக்கான புலிட்ஸா் பரிசுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவா், சக செய்தியாளரான கேதலீன் மெக்கிரோரியுடன் சோ்ந்து இந்தப் பரிசை வென்றுள்ளாா்.

எதிா்காலத்தில் குற்றவாளிகளாகக் கூடியவா்கள் என்று சந்தேகிக்கப்படுவா்கள் குறித்து கணனி முறையில் கண்டறியும் உள்ளூா் காவல் அலுவலகத்தின் சா்ச்சைக்குரிய முயற்சிகள் குறித்து செய்திகள் வெளியிட்டமைக்காக அவா்களுக்கு புலிட்ஸா் விருது வழங்கப்படுகிறது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, அமெரிக்காவில் கருப்பினத்தைச் சோ்ந்த ஜாா்ஜ் ஃபிளாய்டை போலீஸாா் கடந்த ஆண்டு கைது செய்தபோது அவா் உயிரிழந்த சம்பவத்தை விடியோ எடுத்த இளம்பெண் டாா்னெல்லா ஃபிரேஸியா் உள்ளிட்ட பலா் இந்த ஆண்டின் புலிட்ஸா் பரிசை வென்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.