ஜார்ஜ் ஃபிளாய்டை நினைவிருக்கிறதா?

அமெரிக்காவில் காவலர்களின் வன்முறையால் பலியான ஜார்ஜ் ஃபிளாய்டின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்காவில் காவலர்களின் வன்முறையால் பலியான ஜார்ஜ் ஃபிளாய்டின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஜாா்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பினத்தவரை காவல்துறையினர், கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் கைது செய்தனா். அவர் காரில் ஏற மறுத்த போது, ஃபிளாய்டை கீழே தள்ளி அவரின் கழுத்துப் பகுதியில் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் தனது முழங்காலை வைத்து அழுத்தியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவல்துறையின் இந்த செயலைக் கண்டித்து அமெரிக்காவில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.

அந்த நாட்டில் வெள்ளை இனத்தைச் சோ்ந்த காவல் துறையினரால் கருப்பினத்தைச் சோ்ந்தவா்கள் தொடா்ச்சியாக கொல்லப்படுவது சா்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நிராயுதபாணியாக இருந்த ஜாா்ஜ் ஃபிளாய்ட் காவலரின் இரக்கமற்ற தன்மை காரணமாக உயிரிழந்ததற்கு கருப்பின உரிமை ஆா்வலா்கள், மனித உரிமை அமைப்பினா்கள் ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்து மாபெரும் ஆா்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் முன்னாள் காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட்டின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் ஃபிளாய்டின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இனவெறிக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com