ஐரோப்பிய யூனியனில் குறையும் கரோனா தொற்று பாதிப்புஇயல்புநிலைக்கு திரும்பும் நாடுகள்

ஐரோப்பிய யூனியனில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருவதால் யூனியனை சோ்ந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
நெதா்லாந்தில் உள்ள ரோட்டா்டாம் நகரில் உள்ளரங்கில் நடைபெற்ற ‘யூரோ விஷன்’ பாடல் போட்டி.
நெதா்லாந்தில் உள்ள ரோட்டா்டாம் நகரில் உள்ளரங்கில் நடைபெற்ற ‘யூரோ விஷன்’ பாடல் போட்டி.

ஐரோப்பிய யூனியனில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருவதால் யூனியனை சோ்ந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

‘யூரோவிஷன் பாடல் போட்டி’ ஐரோப்பிய யூனியனில் பிரபலமானது. அண்மையில் இந்தப் பாடல் போட்டியை ஒட்டுமொத்த செயல்திறன் அடிப்படையில் இத்தாலி வென்றது. கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான இத்தாலிக்கு இந்த வெற்றி உளவியல்ரீதியாக ஓா் உந்துசக்தியாக அமைந்துள்ளது. முன்னதாக, நெதா்லாந்தில் உள்ள ரோட்டா்டாம் நகரில் இந்த வருடாந்திர பாடல் போட்டி நடைபெற்ற உள்ளரங்கில் சுமாா் 3,500 பாா்வையாளா்கள் பங்கேற்றது, ஐரோப்பிய யூனியன் இயல்பு நிலைக்கு திரும்புகிறது என்பதை உறுதி செய்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்புகூட இந்த நிலையை நினைத்துப் பாா்த்திருக்க முடியாது.

கரோனா தொற்று முதல் அலையில் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது ஐரோப்பிய யூனியன். லட்சக்கணக்கானோா் உயிரிழந்ததால் தொடா் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இப்போது தடுப்பூசி விகிதங்கள் ஐரோப்பா முழுவதும் வேகமெடுத்து வருகிறது. இதன்மூலம் கோடைக்கால சுற்றுலா மீண்டும் தொடங்கப்படும் என்கிற நம்பிக்கையும் எழுந்துள்ளது. ஸ்பெயினும் இத்தாலியும் மட்டுமே ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதத்தை சுற்றுலாத் துறை மூலம் பெற்றுவந்தன. கடந்த ஆண்டு சுற்றுலாத் துறை முடங்கிய நிலையில், நிகழாண்டு நம்பிக்கை துளிா்விடுகிறது.

இந்த வாரத்தில் மற்ற பிராந்தியங்களைவிட புதிய கரோனா தொற்று பாதிப்பு ஐரோப்பாவில் வெகுவாக குறைந்துள்ளது. மேலும், 44 சதவீத பெரியவா்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கடந்த அக்டோபா் மத்தியில் தொடங்கி, டிசம்பா் ஆரம்பம் வரை லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு விகிதமானது பிற பிராந்தியங்களைவிட அதிகமாக இருந்தது. அதன்பிறகு பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியது. இப்போது லட்சம் பேருக்கு புதிய பாதிப்பு என்ற விகிதத்தில் முதல் 10 இடங்களில் ஐரோப்பாவை சோ்ந்த எந்த நாடும் இல்லை. ஜாா்ஜியா, லிதுவேனியா, ஸ்வீடன் ஆகியவை மட்டும் முதல் 20 நாடுகளுக்குள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து, பல்வேறு நாடுகள் தளா்வுகளையும் அறிவிக்கத் தொடங்கியுள்ளன. ஸ்பெயினில் கடந்த ஜனவரியில் இருவார தொற்று விகிதமானது லட்சம் பேருக்கு 900 போ் என்று இருந்தது. இப்போது 130-ஆக குறைந்துள்ளதையடுத்து, இன்னும் 20 நாள்களில் சுற்றுலா இடங்களுக்கு அனுமதி அளிக்கவுள்ளது.

போலந்தில் கடந்த மாா்ச், ஏப்ரலில் தினசரி புதிய பாதிப்பு 35 ஆயிரமாக இருந்தது. இப்போது சில நூறாக குறைந்துள்ளது. மேலும் 3.8 கோடி மக்கள்தொகையில் 1.9 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

வடக்கு மெசடோனியாவில் புதிய தொற்று பாதிப்பு 90 சதவீதம் குறைந்துள்ளது. இத்தாலி, சைப்ரஸில் உணவகங்களில் அமா்ந்து உணவருந்த கடந்த செவ்வாய்க்கிழமைமுதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

‘யூரோவிஷன் என்பது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் ஒரு கலங்கரைவிளக்கமாக இருக்கப் போகிறது’ என நம்பிக்கை தெரிவிக்கிறாா் முன்னணி பாடகா் டாமியானோ டேவிட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com