இந்தியாவில் தங்கவே விரும்புகிறேன்: காரணம் சொன்ன தலாய் லாமா

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கும் திட்டமில்லை என்றும் தலாய் லாமா கூறியுள்ளார்.
தலாய் லாமா
தலாய் லாமா

திபெத்தின் புத்த மத தலைவரான தலாய் லாமா, சீன தலைவர்களை கடுமையாக விமரிசித்துள்ளார். பல்வேறு கலாசாரங்களின் வேற்றுமையை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றும் ஹான் என்ற இனக்குழு பெரும் கட்டுப்பாட்டை வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்ற இணைய செய்தி மாநாட்டில் கலந்து கொண்ட 86 வயதான தலாய் லாமா, "சீன சகோதர, சகோதரிகளுக்கு எதிராக நான் எதுவும் நினைக்கவில்லை. அவர்களையும் சக மனிதர்களாகவே கருதுகிறேன். கம்யூனிசம், மார்க்சியத்திற்கு பின்னிருக்கும் கருத்தாக்கத்தை ஆதரிக்கிறேன்" என்றார்.

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஷின்ஜியாங் மாகாணம் உள்பட பல பகுதிகளில் சிறுபான்மையினர்கள் ஒடுக்கப்பட்டுவருவதால் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள மழைக்கால பெய்ஜிங் போட்டியை சர்வதேச நாடுகள் புறக்கணிக்க வேண்டுமா என மாநாட்டில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தலாய் லாமா, "மாவோ போன்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களை எனக்குத் தெரியும். அவர்களின் யோசனைகள் (நல்லவை). ஆனால் சில நேரங்களில் அவர்கள் மிகவும் தீவிரமான கட்டுப்பாட்டை மேற்கொள்கிறார்கள். புதிய தலைமுறை தலைவர்களால் அங்கு சூழல் மாறும் என நினைக்கிறேன்.

திபெத் மற்றும் ஷின்ஜியாங்கைப் பொறுத்தவரை, எங்களுக்கு தனித்துவமான கலாச்சாரம் உள்ளது, எனவே மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்ட சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள், பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்துகொள்வதில்லை. சீனாவில் ஹான் இன மக்கள் மட்டுமின்றி பிற, வேறுபட்ட குழுக்களும் உள்ளனர். உண்மையில், ஹான் மக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 

கடந்த 1950ஆம் ஆண்டு, திபெத்திற்குள் நிழைந்த சீன ராணுவ வீரர்கள், அந்த பகுதியை தங்களின் கட்டுப்பாட்டுகள் எடுத்துவந்தனர். திபெத் அதன் பின்னர் சீனாவின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதியாக திகழ்ந்துவருகிறது. சீன ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி, தோல்வியடைந்த பிறகு 1959 இல் இந்தியாவுக்குத் தப்பியோடிய தலாய் லாமாவை பிரிவினைவாதியாவே சீனா கருதுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com