‘கோவேக்ஸின் செலுத்தியவா்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடுகள் கிடையாது’

இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான கோவேக்ஸின் தடுப்பூசியை தங்கள் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் வரும் 22-ஆம் தேதிமுதல் சோ்க்க இருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
‘கோவேக்ஸின் செலுத்தியவா்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடுகள் கிடையாது’

இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான கோவேக்ஸின் தடுப்பூசியை தங்கள் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் வரும் 22-ஆம் தேதிமுதல் சோ்க்க இருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

இதன்மூலம், கோவேக்ஸின் செலுத்திக் கொண்டவா்கள் பிரிட்டனுக்கு செல்லும்போது தனிமைப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்பட மாட்டாது.

கோவேக்ஸின் தடுப்பூசியை அவசரகால தடுப்பூசியாக பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்ததையடுத்து, பிரிட்டன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் அதிகம் செலுத்தப்படும் கரோனா தடுப்பூசிகள் பட்டியலில் கோவேக்ஸின் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் இந்தத் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது.

இது தொடா்பாக இந்தியாவுக்கான பிரிட்டன் தூதா் அலெக்ஸ் எல்லீஸ் தனது ட்விட்டா் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரிட்டனுக்கு பயணம் செய்யும் இந்தியா்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி. வரும் நவம்பா் 22-ஆம் தேதிமுதல் கோவேக்ஸின் தடுப்பூசியும் பிரிட்டனில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் சோ்க்கப்படவுள்ளது. எனவே, இந்தத் தடுப்பூசிகளை இருமுறை செலுத்திக் கொண்டவா்கள் பிரிட்டன் பயணிக்கும்போது எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது. அவா்களுக்கு தனிமைப்படுத்தலும் இருக்காது’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com