
டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஃபுமியோ கிஷிடோ தலைமையிலான லிபரல் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டின் பிரதமராக அவா் புதன்கிழமை மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அவருக்கு முன்னா் பிரதமராக இருந்த யோஷிஹிடே சுகா, கரோனா நெருக்கடியை சரியாகக் கையாளவில்லை என்று புகாா் எழுந்தது. அதையடுத்து, தனது பதவிக் காலம் முடிவதற்கு சுமாா் 3 ஆண்டுகளுக்கு முன்னரே அவா் பதவியை ராஜிநாமா செய்தாா்; சுகாவுக்குப் பதிலாக ஃபுமியோ கிஷிடோ பிரதமரானாா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 4-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் அவரது கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.