காலநிலை மாற்ற மாநாட்டை தலைமை தாங்கி நடத்திய இந்திய வம்சாவளி; யார் இந்த அலோக் சர்மா?

கடந்த 1967ஆம் ஆண்டு, அக்ராவில் பிறந்த அலோக் சர்மா, தனது பெற்றோர்களுடன் பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிளாஸ்கோ ஐநா காலநிலை மாற்ற மாநாட்டை தலைமை தாங்கி நடத்த அலோக் சர்மா என்பர் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு வரை, சொந்த ஊரான பிரிட்டனில் கூட பிரபலமில்லாத அவர், தற்போது உலகம் முழுவதும் தேடப்படும் நபராக மாறியுள்ளார். 

கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், கிளாஸ்கோ காலநிலை மாநாட்டை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலோக் சர்மாவிடம் வழங்கினார்.

கரோனா பெருந்தொற்று பரவு தொடங்கி அந்த காலக்கட்டத்திலும் கூட, தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை கடும் பணிசுமைக்கு மத்தியிலும் சிறப்பாக கையாண்டார் அலோக் சர்மா.

சிறிய தீவு நாடுகளுடனும் உலகின் மிக பெரிய பொருளாதாரத்தை வைத்துள்ள சீனாவிடமும் தனது தாய் நாடான இந்தியாவிடமும் தனிப்பட்ட உறவை வளர்த்து கொள்ள முயற்சி மேற்கொண்டார்.

சிறப்பாக பணியாற்றிய அவரை பல்வேறு நாடுகளின் பிரிதிநிகள் புகழ்ந்தனர். காலநிலை மாற்ற மாநாடு போன்ற முக்கியமான நிகழ்வுக்கு இன்னும் திறமைசாளியை போரிஸ் ஜான்சன் நியமித்திருக்க வேண்டும் போன்ற விமர்சனங்களை, தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் பதில் அளித்தார் அலோக் சர்மா.

பிரபஞ்சத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், காப்26-இன் (கிளாஸ்கோ ஐநா காலநிலை மாற்ற மாநாடு) தலைவராக அலோக் சர்மா நியமிக்கப்பட்டபோது, அவருக்கு நிறைய சவால்கள் காத்துக்க கொண்டிருந்தன. கடந்த இரண்டு வாரங்களாக, அனைவரின் கவனமும் அலோக் சர்மா மீது தான் இருந்தது. சமரசமில்லாத பல கோரிக்கைகளை நிறைவேற்ற அவர் முயற்சி மேற்கொண்டார்.

பிரிட்டனின் வணிக செயலாளரான அலோக் சர்மா தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு குறித்து விரிவாக பேசுகையில், "நோ டிராமா சர்மா என மக்கள் எனக்கு செல்ல பெயர் வைத்துள்ளனர்" என நகைச்சுவையாக கூறினார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு வைத்த புனைப்பெயரை போலத்தான் சர்மாவுக்கும் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஒபாமா, 2009ஆம் ஆண்டு, கோபன்ஹேகனின் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டின்போது சீனர்களிடம் கடும் வாக்குவாதம் மேற்கொண்டார். இதையடுத்து, 'நோ டிராமா ஒபாமா' என ஒபாமாவுக்கு புனைப்பெயர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அலோக் சர்மா 1967 இல் ஆக்ராவில் பிறந்தார், அவரது பெற்றோர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனுக்கு மேற்கே உள்ள ரீடிங்கிற்கு குடிபெயர்ந்தனர். இந்திய வம்சாவளியான இங்கிலாந்து நிதி அமைச்சர் ரிஷி சுனக்கைப் போலவே, சர்மாவும் பகவத் கீதையின் மீது பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com