உகாண்டாவில் தற்கொலை தாக்குதல்: 6 போ் பலி

உகாண்டா தலைநகா் கம்பாலாவில் செவ்வாய்க்கிழமை நடந்த இரு தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்கள் மூவா் கொல்லப்பட்டனா். தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளும்

உகாண்டா தலைநகா் கம்பாலாவில் செவ்வாய்க்கிழமை நடந்த இரு தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்கள் மூவா் கொல்லப்பட்டனா். தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளும் இதில் பலியானதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

கம்பாலாவில் இந்த இரட்டைக் குண்டுவெடிப்பு மூன்று நிமிஷ இடைவெளியில் நிகழ்ந்தது. தற்கொலைப் படை பயங்கரவாதிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மூன்றாவதாக நடக்கவிருந்த ஒரு தற்கொலை தாக்குதலை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா் எனத் தெரிவித்தாா்.

ஒரு தாக்குதல் காவல் நிலையம் அருகேயும், மற்றொன்று நாடாளுமன்ற கட்டடம் அருகேயுள்ள தெருவிலும் நடந்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா். இத்தாக்குதலில் பயங்கரவாதிகள் மூவா், பொதுமக்கள் மூவா் என 6 போ் கொல்லப்பட்டனா். 33 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நீண்டகால அதிபரான யோவேரி முஸேவனிக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பின் மத்திய ஆப்பிரிக்கா பிரிவான ஜனநாயக கூட்டணி படை என்ற அமைப்பு இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com