கரோனா தடுப்பு ஆயுதத்துக்கு விடைகொடுக்கப் போகும் வாஷிங்டன்

உள்ளரங்கங்களில் இருப்போர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு நவம்பர் 22ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு ஆயுதத்துக்கு விடைகொடுக்கப் போகும் வாஷிங்டன்
கரோனா தடுப்பு ஆயுதத்துக்கு விடைகொடுக்கப் போகும் வாஷிங்டன்

வாஷிங்டன் : அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அறைகள் அல்லது உள்ளரங்கங்களில் இருப்போர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு நவம்பர் 22ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.

எனினும், உள்ளரங்கம் அல்லது அறைகளில் இருக்கும் தனிநபர்கள் தங்களது சொந்த உடல்நலம் மற்றும் தட்பவெப்பத்தைக் கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம். 

அதே வேளையில், தனியார் நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்து, பள்ளிகள், குடியிருப்பு வளாகங்கள், சிறு மருத்துவமனைகள் போன்றவற்றில், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் மேயர் முரியல் பௌஸர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில், செவ்வாயன்று ஏழு நாள் கரோனா சராசரி ஒரு லட்சம் பேருக்கு 12 ஆக சரிந்தது. இது அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் குறைவாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com