நீரவ் மோடியின் மனுவை தள்ளுபடி செய்தது அமெரிக்க நீதிமன்றம்

தன் மீதான மோசடிப் புகார்கள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு கோரி இந்தியாவில் மோசடி செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடி உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
நீரவ் மோடி (கோப்புப்படம்)
நீரவ் மோடி (கோப்புப்படம்)


வாஷிங்டன்: தன் மீதான மோசடிப் புகார்கள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு கோரி இந்தியாவில் மோசடி செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவாக இருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடி உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

நியூ யார்க்கில் உள்ள வங்கி மோசடி வழக்குகளை விசாரித்து வரும் நீதிமன்றம், நீரவ் மோடி உள்ளிட்டோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 200 கோடி அமெரிக்க டாலா் முறைகேடு வழக்கில் தேடப்படும் நபராக உள்ள வைர வியாபாரி நீரவ் மோடியை (50) நாடு கடத்த உத்தரவிட்ட லண்டன் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருக்கும் நிலையில், நீரவ் மோடி மீதான மற்றொரு மோசடி வழக்கில், புகாரை ரத்து செய்யக் கோரி நீரவ் மோடியின் மனு அமெரிக்க நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com