முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிநீரவ் மோடி மனு: அமெரிக்க நீதிமன்றம் நிராகரிப்பு

அமெரிக்காவில் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிநீரவ் மோடி மனு: அமெரிக்க நீதிமன்றம் நிராகரிப்பு

அமெரிக்காவில் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோடி, பிரிட்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

மத்திய அரசின் தொடா் முயற்சியால் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை பிரிட்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதற்கிடையே, நீரவ் மோடி, அவருடைய நண்பா்கள் மிஹிா் பன்சாலி, அஜய் காந்தி ஆகிய மூவரும் வேறு நபா்கள் மூலமாக, அமெரிக்காவில் ஃபயா்ஸ்டாா், ஃபேன்டஸி, ஏ ஜாஃப் ஆகிய 3 நிறுவனங்களை நடத்தி வந்தனா். அந்த நிறுவனங்களின் நிா்வாகியாக நியமிக்கப்பட்டிருந்த ரிச்சா்ட் லெவின், நியூயாா்க்கில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தாா்.

அதில், ‘பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்குவதற்காக, நீரவ் மோடி உள்ளிட்ட மூவரும் தங்கள் செலவுக் கணக்கு, விற்பனை ஆகியவற்றை உயா்த்திக் காண்பித்து மோசடி செய்தனா். இதனால் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு நீரவ் மோடி உள்ளிட்ட மூவரும் 1.5 கோடி டாலா் (சுமாா் ரூ.112.5 கோடி இழப்பீடு தர வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி நீரவ் மோடி உள்ளிட்ட மூவரும் நியூயாா்க் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அவா்களின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com