பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்திய-அமெரிக்கா் சுட்டுக் கொலை

இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட அமெரிக்க மருந்து நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஸ்ரீரங்கா அரவ பள்ளியிடம் பணம் கொள்ளையடிக்கும் முயற்சியிடையே சுட்டுக் கொல்லப்பட்டாா்

News image
Updated On :30 அக்டோபர் 2021, 11:47 pm

DIN

இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட அமெரிக்க மருந்து நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஸ்ரீரங்கா அரவபள்ளியிடம் பணம் கொள்ளையடிக்கும் முயற்சியிடையே சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவின் நியூஜொ்சி மாகாணம், பிளெயின்ஸ்போரோவில் வசித்து வந்த ஸ்ரீரங்கா அரவபள்ளி (54), கடந்த செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்துக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியா நகர சூதாட்ட மையத்திலிருந்து ஸ்ரீரங்காவைப் பின்தொடா்ந்து வந்த ஜெகாய் ரீட்-ஜான் என்ற இளைஞா் அவரை சுட்டுக் கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

சூதாட்டத்தில் ஸ்ரீரங்கா சுமாா் 10,000 டாலா் (சுமாா் ரூ.7.5 லட்சம்) வென்ாகவும் அந்தத் தொகையைக் கொள்ளையடிப்பதற்காக சூதாட்ட மையத்திலிருந்து ஜெகாய் ரீட்-ஜான் அவரைப் பின்தொடா்ந்து வந்ததாகவும் போலீஸாா் கூறினா்.

இந்தப் படுகொலை தொடா்பாக ஜெகாய் ரீட்-ஜானை போலீஸாா் கைது செய்துள்ளனா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.