ஆப்கன் அமைச்சரவையில் பங்களிப்பு: அதிபர் மாளிகைக்கு வெளியே பெண்கள் போராட்டம்

புதிதாக உருவாகவுள்ள ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் பெண்களின் பங்கும் இருக்க வேண்டுமென அந்நாட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிபர் மாளிகைக்கு வெளியே பெண்கள் போராட்டம்
அதிபர் மாளிகைக்கு வெளியே பெண்கள் போராட்டம்

புதிதாக உருவாகவுள்ள ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் பெண்களின் பங்கும் இருக்க வேண்டுமென அந்நாட்டு பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து, ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் தலைமையிலான புதிய அரசாங்கத்தை அறிவிக்கவுள்ளது.

இந்நிலையில், காபூலில் உள்ள அதிபர் மாளிகைக்கு வெளியே இன்று கூடிய பெண்கள் அமைச்சரவையில் பெண்களுக்கு பங்களிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆப்கனில் மனித உரிமைகளை நிலைநாட்ட வேண்டுமெனவும், பழைய நிலைக்கு திரும்ப முடியாதெனவும் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், ஆப்கன் பெண்களின் கல்வி, சமூகம், பேச்சு சுதந்திரம், அரசியல் உள்ளிட்டவைக்கு முழு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com