ஸ்பெயினில் வெடிக்கக் காத்திருக்கும் எரிமலை: மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

ஸ்பெயினின் கேனரி தீவில் உள்ள எரிமலை தீப்பிழம்புகளை வெளியிட்டு வருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஸ்பெயினில் உள்ள லா பால்மாவின் கேனரி தீவின் தெற்கே உள்ளது டெனிகுவியா எரிமலை. அவ்வப்போது இந்த எரிமலையைச் சுற்றியுள்ள கும்ப்ரே விஜா தேசியப் பூங்கா பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம். நிலநடுக்க அச்சுறுத்தலால் எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கும்ப்ரே விஜா எரிமலையில் தீப்பிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது எரிமலையிலிருந்து லார்வா குழம்புகள் கசியத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். 

முன்னெச்சரிகை நடவடிக்கையாக பாதைகள் மூடப்பட்டு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னதாக, கும்ப்ரே வீஜா எரிமலையைச் சுற்றி கடந்த ஒன்பது நாட்களில் மட்டும் 25,000 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் கண்டறியப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com