மிகக் கடினமான நாள்கள் காத்திருக்கின்றன: ஈரான் சுகாதாரத் துறை அமைச்சர்

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 117 பேர் பலியாகியிருக்கும் நிலையில், மிகக் கடினமான நாள்கள் காத்திருப்பதாக ஈரான் நாட்டு சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சயீத் நமகி எச்சரித்துள்ளார்
மகாராஷ்டிரத்தில் சிறுவர்களை அதிகளவில் தாக்கும் கரோனா: இளைஞர்களே உஷார்
மகாராஷ்டிரத்தில் சிறுவர்களை அதிகளவில் தாக்கும் கரோனா: இளைஞர்களே உஷார்


டெஹ்ரான்: கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 117 பேர் பலியாகியிருக்கும் நிலையில், மிகக் கடினமான நாள்கள் காத்திருப்பதாக ஈரான் நாட்டு சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சயீத் நமகி எச்சரித்துள்ளார்.

ஈரானில், கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், நமகி சமூக ஊடகம் ஒன்றில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில், மருத்துவ நிபுணர்கள் சொல்லும் அறிவுரைகளை மக்கள் பின்பற்றாவிட்டால், மிகக் கடினமான நாள்கள் காத்திருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 14 மாதங்களாக நாட்டில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். அவர்களையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறை மிகவும் அவசியம். ஆனால், கரோனா பெருந்தொற்று, சுற்றுலாத்துறையை முடக்கிவிடும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

ஈரானில், இந்த ஆண்டு கரோனாவுக்கு ஒரே நாளில் 117 பேர் பலியானதே இதுவரை மிக அதிகபட்ச உயிரிழப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 62,876 ஆகவும், மொத்த கரோனா பாதிப்பு 19,08,974 ஆகவும் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com