இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. 
இந்தோனேசியாவில்  நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு
இந்தோனேசியாவில்  நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சிக்கினர். 

இந்த நிலச்சரிவில் சிக்சி புளோரஸ் திமூர் மாவட்டத்தில் 44 பேரும், லெம்பட்டா மாவட்டத்தில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 
புளோரஸ் திமூர் மாவட்டத்தில் 24 பேரும், லெம்பாட்டாவில் 16 பேரும் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாயமானவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த வாரம்  இந்தோனேசியாவின் சில பகுதிகள் கடும் மழை, பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com