சிக்னல் செயலியைப் பயன்படுத்தும் முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் 

முகநூல் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்ச் ஸக்கர்பெர்க்கும் ஒருவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
சிக்னல் செயலியைப் பயன்படுத்தும் முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் 
சிக்னல் செயலியைப் பயன்படுத்தும் முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் 

உலகளவில் முகநூல் பயனாளர்களின் செல்லிடப்பேசி உள்ளிட்ட விவரங்கள் கசிந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதில், முகநூல் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்ச் ஸக்கர்பெர்க்கும் ஒருவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

உலக அளவில் முகநூல் பக்கத்தை பயன்படுத்துபவா்களில் 53.3 கோடி பேரின் பெயா், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இணைய வழியில் கசிந்தன. இந்த தகவல்கள் அனைத்தையும் இணைய ஊடுருவல் கும்பல்கள் வெளியிட்டிருக்கின்றன.

இந்த நிலையில், உலகளவில் கசிந்த 53.3 கோடிப் பேரின் பெயர், செல்லிடப்பேசி விவரங்களில் மார்க் ஸக்கர்பெர்க்கின் செல்லிடப்பேசியும், அதன் விவரங்களும் அடங்கும்.  அதில், மார்ச் ஸக்கர்பெர்க்கின் பெயர், அவர் பயன்படுத்தும் செல்லிடப்பேசி எண், அவரது பிறந்த தேதி, வாழ்விடம் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கசிந்துள்ளன.

அது மட்டுமல்ல, மார்க் ஸக்கர்பெர்க் தனது செல்லிடப்பேசியில் சிக்னல் செயலியையும் பயன்படுத்துவது தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், தனது தனிப்பட்ட விவரங்களை பாதுகாப்பதில் மார்க் ஸக்கர்பெர்க் அக்கறை கொண்டுள்ளார். அவரது தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் என்க்ரிஃப்ஷன் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தகவல் அனுப்புபவரிடமிருந்து, பெறுபவருக்கு மட்டுமே தகவல்கள் கிடைக்கும், ஆனால் இந்த வசதி ஃபேஸ்புக்கில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்கள் அனைத்தையும், இணையவழியில் ஊடுருவி தகவல்களைத் திருடும் (ஹேக்கிங்) வலைதள கும்பல்கள் வெளியிட்டிருப்பதாக ஹட்சன் ராக் என்ற இணைய பாதுகாப்பு நிறுவனத்தைச் சோ்ந்த ஆலன் கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் அவா் கூறியிருப்பதாவது:

உலக அளவில் முகநூல் பக்கத்தை பயன்படுத்துபவா்களில் 53.3 கோடி பேரின் பெயா், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் இணைய வழியில் கசியவிடப்பட்டிருக்கிறது. இந்த தகவல்கள் அனைத்தையும் இணைய ஊடுருவல் கும்பல்கள் வெளியிட்டிருக்கின்றன.

அமெரிக்காவிலிருந்து 3.23 கோடி பேரின் தகவல்களும், பிரிட்டனிலிருந்து 1.15 கோடி பேரின் தகவல்களும், ஆஸ்திரேலியாவிலிருந்து 73 லட்சம் பேரின் தகவல்களும், இந்தியாவிலிருந்து 61 லட்சம் பேரின் தனிப்பட்ட தகவல்களும் இதுபோன்று கசியவிடப்பட்டிருக்கின்றன. விளம்பரங்கள், சந்தைப்படுத்துதலுக்கு மட்டுமின்றி இணையவழி மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கும் இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவன செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், ‘இது கடந்த 2019-இல் வெளியான பழைய புள்ளிவிவரமாகும். இதை முகநூல் நிறுவனம் கடந்த 2019 ஆகஸ்ட் மாதமே கண்டறிந்து, தீா்வும் கண்டுவிட்டது’ என்றாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் இந்தியாவில் முகநூல் பயன்படுத்துபவா்களில் 5.62 லட்சம் பேரின் தகவல்களும், சா்வதேச அளவில் 87 லட்சம் பேரின் தகவல்கள் கசிந்து மிகப் பெரும் சா்ச்சையானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com