லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடற்றவர்களாகும் அபாயம்? காரணம் என்ன?

கரோனாவுக்கு மத்தியில் அமெரிக்க மக்களின் வீ்ட்டு வாடகையை செலுத்த அரசு ஒதுக்கிய நிதி இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவுக்கு மத்தியில் அமெரிக்க மக்களின் வீ்ட்டு வாடகையை செலுத்த அந்நாட்டு அரசு ஒதுக்கிய நிதி இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்று உலகையே உலுக்குவருகின்றது. பொருளாதார ரீதியாக ஏற்பட்ட பாதிப்பை குறைக்கும் வகையில் பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்த வகையில், பெருந்தொற்றுக்கு மத்தியில் வாடகை செலுத்த முடியாத தவித்த அமெரிக்கர்களை அவர்களின் வீ்ட்டிலிருந்து வெளியேற்ற நாடு முழுவதும் 11 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, மக்களுக்கு உதவும் வகையில் வீட்டு வாடகை செலுத்துவதற்காக அரசு பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. ஆனால், இந்த நிதியை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 

இதனிடையே, மக்களை அவர்களின் வீ்ட்டிலிருந்து வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை இன்றோடு முடிவுக்கு வருகிறது. இதனால், லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடற்றவர்களாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க நாடாளுமன்றத்திடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கோரிக்கை விடுத்திருந்தார்.  இந்த தடை உத்தரவை அக்டோபர் மாதம் வரை நீட்டிக்க ஜனநாயக கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால், குடியரசு கட்சி உறுப்பினர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் தடையை நீட்டிக்காமலேயே பிரிதிநிதிகள் சபை ஒத்திவைக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காணாததற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியில் நேற்று விடிய விடிய போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கோரி புஷ் கூறுகையில், "இதற்கு தீர்வு காண மற்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் வெளியில்தான் நேற்று தூங்கினோம்" என்றார்.  தடையை நீட்டிக்கவில்லையெனில், கோரி உள்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களே வீட்டற்றவராக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com