இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பெகாஸஸ் விவகாரத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணை

பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஆகஸ்ட் 2021, 5:57 am

DIN

பெகாஸஸ் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடா்பாக ஓய்வுபெற்ற அல்லது பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி மூத்த பத்திரிகையாளா்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

இந்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் சார்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி வாதம் முன்வைத்தார்.

அப்போது, "பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலமாக, எதிர்க்கட்சித் தலைவா்கள், பத்திரிகையாளா்கள் மட்டுமன்றி நீதித்துறை அலுவலர்களும் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், குடிமக்களின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என கபில் சிபல் தெரிவித்தார்.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "மத்திய அரசோ அல்லது அரசின் பாதுகாப்பு அமைப்புகளோ பெகாஸஸ் உளவு மென் பொருளைப் பயன்படுத்தும் உரிமம் பெற்றிருந்தால் அது சார்ந்த தகவலை வெளியிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். செல்லிடப்பேசிகளை வேவு பார்க்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த வகையில் அனுமதி பெற்றிருக்கிறது என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்.

பெகாஸஸ் மென்பொருளைப் பயன்படுத்தி பத்திரிகையாளா்கள், வழக்குரைஞா்கள், அமைச்சா்கள், எதிர்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள் உள்பட 142 இந்தியா்களின் தொலைபேசிகள் உளவு பார்க்க சாத்தியமுள்ளவா்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தனி மனித சுதந்திரம், கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு விரோதமானது. இது தொடா்பாக நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யா காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல். சர்மா ஆகியோர் இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவும் என். ராம், சசி குமார் ஆகியோரின் மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.