நீட் தேர்வு ரத்து குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திருச்சி சிவா எம்.பி. அவசர விவாதத்திற்கான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
நீட் தேர்வது வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் 18க்கும் மேற்பட்டோர் இந்த விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இளைஞர்கள் தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, தில்லியில் ஒரு மாபெரும் போராட்டத்த்தை முன்னெடுத்து சாதித்தும் காட்டியுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் அவசரமாக விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் எம்.பி. திருச்சி சிவா இன்று நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உயிரைப் பலிவாங்கியும் குடும்பங்களைச் சிதைத்தும் மருத்துவர்களாக வேண்டும் என்ற கிராமப்புற ஏழை மாணவர்களின் கனவுகளைச் சீர்குலைத்தும் வரும் பேரழிவுமிக்க நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல மேக்கேதாட்டு விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இரு அவைகளிலும் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
Summary
DMK MP Tiruchi Siva has given Suspension of Business for neet exam cancellation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘நீட்’ விவகாரத்தில் தவெக அரசு மௌனம் - கனிமொழி விமா்சனம்

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்
தவெக அரசு கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: திருச்சி சிவா எம்.பி.

மருத்துவரிடம் நகை, பணம் அபகரிப்பு: திருச்சி சிவா எம்.பி. மகள் மீது புகாா்
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |




