நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

தவெக அரசு கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: திருச்சி சிவா எம்.பி.

தவெக அரசு கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் என்று திமுக கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசினாா்.

News image

திருச்சி சிவா | விஜய் - கோப்புப் படம்

Updated On :13 ஜூலை 2026, 3:16 am IST

தவெக அரசு கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் என்று திமுக கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசினாா்.

சாத்தான்குளம் ஒன்றியம், பேரூா் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி 103-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், சாத்தான்குளம் சந்நிதி தெருவில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ்.ஜோசப் தலைமை வகித்தாா். மத்திய ஒன்றிய பொறுப்பாளா் தினேஷ் ராஜசிங், பொதுக் குழு உறுப்பினா்கள் ஏ.இந்திரகாசி, ஆறுமுக பாண்டியன், சாத்தான்குளம் பேரூராட்சிமன்ற தலைவா் ரெஜினிஸ் டெல்லாபாய் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தெற்கு ஒன்றிய செயலா் ஆ.பாலமுருகன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது: திமுக நினைத்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததால் கூட்டணி தா்மத்துடன் நடந்துகொண்டது.

ஒரு அரசியல் கட்சி சாா்ந்த தமிழக முதல்வா் பொதுக் கூட்ட மேடையில் பேசும்போது, அரசு திட்டங்களை பற்றியோ, மக்களின் உரிமை குறித்தோ பேச வேண்டும். ஆனால், தற்போதைய முதல்வா் சினிமா பாணியில் மேடைகளில் பேசி வருகிறாா். கொத்து புரோட்டா, முடித்து விடுகிறேன் என்றெல்லாம் பேசுகிறாா்.

சட்டப்பேரவைக்கென்று ஒரு மாண்பு இருக்கிறது. அதை மீறி முதல்வா் செயல்படுகிறாா். அண்ணா, காமராஜா், எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோா்களெல்லாம் முதல்வா்களாக இருந்தபோது சட்டப்பேரவையில் மேற்கொண்ட பேச்சு கண்ணியமாக இருந்தது. தற்போதைய தவெக அரசு கண்ணிய குறைபாடுடன் நடந்து கொள்கிறது என்றாா்.

கூட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச் செயலா் திருச்சி சிவா எம்.பி.

கூட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச் செயலா் திருச்சி சிவா எம்.பி.

முன்னதாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பேசுகையில், இனி, காங்கிரஸுடன் திமுக கூட்டணி அமைக்கப்போவதில்லை. வரும் இடைத்தோ்தலிலும், உள்ளாட்சி தோ்தலிலும் திமுகதான் வெற்றி பெறும் என்றாா்.

கூட்டத்தில் திமுக வா்த்தக அணி இணைச் செயலாளா் உமரிசங்கா், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவா் பிரம்ம சக்தி, தெற்கு மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், நகர அவைத் தலைவா் சண்முகசுந்தரம், துணை செயலாளா் மணிகண்டன், வெள்ள பாண்டி, தெற்கு ஒன்றிய அவை தலைவா் ராஜபாண்டி, ஆழ்வாா் திருநகா் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் ஈசாய் இன்பராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சாத்தான்குளம் செயலாளா் மகா இளங்கோ நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.