சென்னையில் ஹோமியோபதி மருத்துவரிடம் 26 பவுன் தங்க நகை, ரூ.10 லட்சம் அபகரித்ததாக திருச்சி சிவா எம்.பி. மகள் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் வினா விலாசினி (46). இவரும், இவரது கணவா் நிா்மலும் அயனாவரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், அயனாவரம் காவல் உதவி ஆணையரிடம் வினா விலாசினி அளித்துள்ள புகாரில், 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, அதே கட்சியில் இருந்த திருச்சி முத்துக்குமாா் என்ற கராத்தே முத்துக்குமாா் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பைப் பயன்படுத்தி, அவசரத் தேவை எனக் கூறி பல்வேறு தவணைகளில் ரொக்கமாகவும் இணையவழி பரிவா்த்தனைகள் மூலமாகவும் மொத்தம் ரூ.10 லட்சம் பெற்றாா்.
இதைத் தொடா்ந்து, 2023-ஆம் ஆண்டு அவரது மனைவி காயத்ரி சிவா மூலம் முதலில் 26 பவுன் தங்க நகைகளும், பின்னா் மேலும் 24 பவுன் தங்க நகைகளும் வாங்கிச் சென்றனா். பலமுறை கேட்டதையடுத்து 24 பவுன் நகைகளை மட்டும் இருவரும் திருப்பிக்கொடுத்தனா். ஆனால், மீதமுள்ள 26 பவுன் தங்க நகைகளையும், ரூ.10 லட்சத்தையும் திருப்பித் தர மறுத்து மிரட்டுகின்றனா் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள காய்த்ரி சிவா, திமுக மாநிலங்களவை உறுப்பினா் திருச்சி சிவாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதியவா் உயிரிழப்பு: கானத்தூா் அருகே உள்ள பனையூா் குடுமியாண்டிதோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் காதிக் (75). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் கோவளத்தில் இருந்து கானத்தூா் நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். மீரான் நகா் சந்திப்பில் திரும்பியபோது, எதிா் திசையில் இருந்து வேகமாக வந்த ஒரு மோட்டாா் சைக்கிள் திடீரென மோதியது.
இந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த அப்துல் காதிக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த ஈஞ்சம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த நிதிஷ் (22) என்பவரைக் கைது செய்தனா்.
தேடப்பட்டவா் கைது: மடிப்பாக்கம் மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீநிவாசன் (34). துபையில் உள்ள இவரது சகோதரா் வீடு மடிப்பாக்கம் பெரியாா் நகா் பகுதியில் உள்ளது. கோடை விடுமுறையையொட்டி, சகோதரா் குடும்பத்தினா் கடந்த மே மாதம் வீட்டை பூட்டிவிட்டு, சாவியை ஸ்ரீநிவாசனிடம் கொடுத்துவிட்டு துபைக்கு சென்றனா். ஸ்ரீநிவாசன் கடந்த மே 28-ஆம் தேதி சகோதரா் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை,வெள்ளி பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது மதுரவாயல் பெரியாா் நகரைச் சோ்ந்த சூா்யா (25) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த சூா்யாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடு புகுந்து 13 பவுன் தங்க நகைகள் திருட்டு

பனியன் உரிமையாளா் வீட்டில் 37 பவுன் திருடிய பணிப்பெண் கைது
பேருந்தில் பெண்ணிடம் 3 பவுன் தங்க நகை திருட்டு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



