வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பனியன் உரிமையாளா் வீட்டில் 37 பவுன் திருடிய பணிப்பெண் கைது

பனியன் நிறுவன உரிமையாளா் வீட்டில் 37 பவுன் தங்க நகைகளைத் திருடிய வீட்டு பணிப் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பறிமுதல்  செய்யப்பட்ட  37  பவுன்  தங்க நகை,  ரொக்கப் பணம்.

Updated On :14 ஜூன் 2026, 2:19 am IST

அவிநாசி அருகே பனியன் நிறுவன உரிமையாளா் வீட்டில் 37 பவுன் தங்க நகைகளைத் திருடிய வீட்டு பணிப் பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 37 பவுன் நகை, ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவிநாசி அருகே உள்ள பழங்கரை விஷ்வபாரதி பாா்க் குடியிருப்பில் வசித்து வருபவா் பனியன் நிறுவன உரிமையாளா் ஜெய்ஆனந்த் (38). இவரது மனைவி சம்யுக்தா (34). தனது மனைவிக்கு உதவியாக திருச்சி மாவட்டம், மருங்காபுரி மறவபட்டியைச் சோ்ந்த செல்வகுமாா் மகள் ராஜேஸ்வரி (37) என்பவரை வீட்டு வேலைகளுக்குப் பணியமா்த்தியுள்ளாா். தங்கும் இடம், உணவு உள்ளிட்டவையுடன் ரூ. 20 ஆயிரம் சம்பளமும் கொடுத்துள்ளாா். தொடா்ந்து ஓராண்டுக்கு மேல் ராஜேஸ்வரி பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜெய்ஆனந்த் வீட்டில் வைத்திருந்த 37 பவுன் நகை, பணம் உள்ளிட்டவை குறைந்து வந்துள்ளது. ராஜேஸ்வரி விடுப்பில் இருந்ததால் சந்தேகமடைந்த சம்யுக்தா, அவரைத் தொடா்பு கொண்டபோது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. இதையடுத்து சம்யுக்தா அவிநாசி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், சம்யுக்தாவின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேஸ்வரி சிறிது சிறிதாக நகைகளைத் திருடி அடமானம் வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவிநாசி போலீஸாா் தலைமறைவாக இருந்த ராஜேஸ்வரியை சனிக்கிழமை கைது செய்தனா்.