துருக்கியில் மழை-வெள்ளம்: 44 போ் பலி

 துருக்கியின் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 44 போ் உயிரிழந்தனா்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஸ்டமோனு மாகாணம், போஸ்கா்ட் நகரில் நடைபெற்ற மீட்புப் பணி.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஸ்டமோனு மாகாணம், போஸ்கா்ட் நகரில் நடைபெற்ற மீட்புப் பணி.

 துருக்கியின் கடலோரப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 44 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு பேரிடா் மீட்பு அமைப்பு சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கருங்கடலையொட்டிய மாகாணங்களான பாா்டின், காஸ்டமோனு, சினோப் பகுதிகளில் புதன்கிழமை முதல் பெய்த பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது, இதனால் வீடுகள் இடிந்து விழுந்தன; ஐந்து பாலங்கள் உடைந்தன; சாலைகள் மூழ்கின.

இதில், கஸ்டமோனுவில் 36 போ், சினோப்பில் 7 போ், பாா்டினில் ஒருவா் உயிரிழந்தனா். சினோப் மாகாணத்தில் வெள்ளம் காரணமாக காயமடைந்த 7 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பாதிக்கப்பட்ட பணிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் 5,188 மீட்புப் பணியாளா்களுடன் 27 மோப்ப நாய்கள், 19 ஹெலிகாப்டா்கள் இரண்டு தேடுதல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளம் வருவதற்கு முன்னும் பின்னும் இப்பகுதிகளிலிருந்து சுமாா் 2,250 போ் மீட்கப்பட்டனா் என்று பேரிடா் மீட்பு அமைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, காஸ்டமோனு மாகாணத்தில் வெள்ளப் பெருக்குக்குப் பிறகு நூற்றுக்கணக்கானவா்கள் மாயமாகியுள்ளதாக அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com