காபூலுக்குள் நுழைந்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலுக்குள் அவர்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலுக்குள் அவர்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்துள்ளதாக ஏஃஎப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் எடுப்பதில் இறுதி கட்டத்தை அவர்கள் அடைந்துள்ளனர்.

ஆப்கன் படைகளின் கோட்டையாக கருதப்படும் மசார்-இ-ஷெரீப்பை கைப்பற்றியதை தொடர்ந்து, கிழக்கு பகுதியின் முக்கிய நகரமான ஜலாலாபாத் முழுவதையும் தலிபான்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்தனர். கடந்த 10 நாள்களில், ஆப்கன் அரசு படைகள் பெரும் பின்னடைவை சந்தித்தனர். 

இதுகுறித்து தலிபான்கள் ஆதரவு சமூகவலைதளங்கள், "காபூல் மாகாணத்தின் தொலைதூர பகுதிகள் நோக்கி எங்கள் படைகள் வேகமாக முன்னேறிவருகிறது. தலைநகரின் புறநகர் பகுதிகளை நெருங்கிவருகிறோம்" என பதிவிட்டிருந்தன. 

காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்தது குறித்து ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனின் தலைமை அலுவலர் மாடின் பெக் கூறுகையில், "அச்சப்பட வேண்டாம். காபூல் பாதுகாப்பாக உள்ளது" என்றார். தலிபான்கள் காபூலை சுற்றி வளைத்துள்ள நிலையில், ஆப்கள் படைகள் சரணடையுமா அல்லது கடும் போரை மேற்கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com