பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 434 பேர் பலியாகினர்.
உலகளவில் கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடத்திலும் கரோனா பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து 3 ஆவது இடத்திலும் உள்ளது பிரேசில். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கரோனா பலி எண்ணிக்கை இங்கு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கரோனா பாதிப்பு குறித்து பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 434 பேர் பலியாகினர். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 5,69,492 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 14,471 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,03,78,570 ஆக அதிகரித்துள்ளது.
தென்னமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த சில நாள்களாக கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைவசதிகள் நிரம்பியுள்ளன.