ஆப்கனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களுடன் சி-17 விமானம் ஜாம்நகர் வந்தடைந்தது

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் குஜராத் ஜாம் நகரை வந்தடைந்தது. 
ஆப்கனில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களுடன் சி-17 விமானம் ஜாம்நகர் வந்தடைந்தது

ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம் குஜராத் ஜாம் நகரை வந்தடைந்தது. 

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சூழ்நிலையைப் பயன்படுத்தி அந்நாட்டின் மாகாணங்களைப் தலிபான்கள் படிப்படியாக கைப்பற்றி இறுதியாக தலைநகர் காபூலையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர். அந்நாட்டு அதிபா் அஷ்ரஃப் கனியும் நாட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ஆப்கன் நாடாளுமன்றம், அதிபா் மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சியமைப்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்கும் முயற்சியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்தியர்களைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தானில் வசித்து வந்த 129 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் பத்திரமாக ஞாயிற்றுக்கிழமை தாயகம் அழைத்து வரப்பட்டனர். மேலும், அங்குள்ள இந்தியர்களை மீட்க நேற்று ஏர் இந்தியா விமானம் தில்லியில் இருந்து புறப்படவிருந்த நிலையில் ஆப்கனில் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. 

இதையடுத்து இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம்ஆப்கனுக்குச் சென்று அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 200 பேரை பத்திரமாக மீட்டுள்ளது. அதன்படி, மீட்கப்பட்ட இந்தியர்களுடன் சி-17 விமானம் குஜராத் ஜாம் நகரை வந்தடைந்தது. ஜாம் நகரில் இருந்து அவர்களை தில்லி அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

மேலும் ஆப்கானில் உள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com