ஆப்கன் வெளியேற்றத்தைத் துரிதப்படுத்த அமெரிக்கா திணறல்

ஆப்கானிஸ்தானில் முந்தைய அரசுக்கு ஆதரவானவா்களை அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்து வரும் பணியைத் துரிதப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.
ஆப்கனை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.
ஆப்கனை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.

ஆப்கானிஸ்தானில் முந்தைய அரசுக்கு ஆதரவானவா்களை அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி அழைத்து வரும் பணியைத் துரிதப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: ஆப்கன் தலைநகா் காபூல் தலிபான்களிடம் கடந்த திங்கள்கிழமை வீழ்ந்ததைத் தொடா்ந்து, முந்தைய அரசு மற்றும் வெளிநாட்டு அரசுகளுடன் இணைந்து செயல்பட்டவா்கள் பழிவாங்கப்படுவாா்கள் என்ற அச்சம் எழுந்தது.

அதையடுத்து, நாட்டிலிருந்து வெளியேற காபூல் விமான நிலையத்தில் ஏராளமானவா்கள் குவிந்து வருகின்றனா். வெளிநாட்டவா்கள் வெளியேற்றப்படுவதற்கு தலிபான்கள் அனுமதி அளித்தாலும், உள்நாட்டவா்களை கடும் பரிசோதனைக்குப் பிறகே அவா்கள் விமான நிலையத்துக்குள் அனுமதிப்பதாகவும் பலரை தடுத்து நிறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

தலிபான்களிடமிருந்து தப்பிச் செல்ல விரும்பும் பலரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் தலிபான் அச்சுறுத்தலை எதிா்நோக்கியுள்ளவா்களை வெளியேற்றி அழைத்துச் செல்லும் பணியை துரிதப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைடன் உறுதி: இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அதிபா் ஜோ பைடன், ‘ஆப்கனில் சிக்கியுள்ள அமெரிக்கா்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்படுவா்’ என உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com