கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு; முதல்முறையாக கரோனா பாதிப்பை உறுதி செய்த தீவு நாடு

மீட்பு விமானம் மூலம் வந்த 10 வயது சிறுவனக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் மார்க் பிரவுன் தெரிவித்துள்ளார்.
குக் தீவுகள்
குக் தீவுகள்

கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து முதல்முறையாக குக் தீவுகளில் கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான குக்கில், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படவுள்ள நிலையில், முதல் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

குக் தீவுகளின் மக்கள் தொகை 17 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக தடுப்பூசி விகிதம் கொண்ட நாடாக இது திகழ்கிறது. இங்கு அனுமதி வழங்கப்பட்டவர்களில், 96 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். 

மீட்பு விமானம் மூலம், குடும்பத்தினருடன் வந்துள்ள 10 வயது சிறுவனக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு பிரதமர் மார்க் பிரவுன் தெரிவித்துள்ளார். அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அச்சிறுவன் நியூசிலாந்திலிருந்து வந்திருக்கலாம் எனக் கூறுப்படுகிறது.

இதுகுறித்து மார்க் பிரவுன் விரிவாக பேசுகையில், "எங்கள் எல்லைகளை மீண்டும் திறக்கும் நேரத்திற்கு நாங்கள் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த பாதிப்பை எல்லையிலேயே கண்டறிந்ததன் மூலம் நாங்கள் எந்தளவுக்கு தயாராக இருக்கிறோம் என்பது எங்கள் சோதனை நடவடிக்கைகள் வழியாக தெரிந்து கொள்ளலாம்" என்றார்.

கரோனா பெருந்தொற்று பரவு தொடங்கியபோது, உலக நாடுகளிலிருந்து குக் தீவுகள் தனிமைப்படுத்தி கொண்டது. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 14ஆம் தேதி முதல், தனிமைப்படுத்தல் விதிகள் இல்லாமல் நியூசிலாந்திலிருந்து குக் தீவுகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படவிருந்தது.

முன்னதாக, நியூசிலாந்துடன் குக் தீவுகள் பயோ பபுள்  ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. ஆனால், ஆக்லாந்து நகரில் கரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com