
lanka100204
இலங்கையில் பொது இடங்களுக்கு வருவோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அதிபா் கோத்தபய ராஜபட்ச அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பொது இடங்களுக்கு வருவோா் கரோனா தடுப்பூசி சான்றிதழைக் காட்டவேண்டியதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சட்ட ஆலோசனைகளைக் கேட்டு வருகிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 1.59 கோடி பேருக்கு ஒரு தவணையும் 11 லட்சம் பேருக்கு இரண்டு தவணைகளும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.