ஒமைக்ரான் 70 மடங்கு வேகத்தில் பரவும்: ஆய்வில் தகவல்

டெல்டா வகை கரோனாவைவிட ஒமைக்ரான் வகை 70 மடங்கு அதிக வேகத்தில் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய
ஒமைக்ரான் 70 மடங்கு வேகத்தில் பரவும்: ஆய்வில் தகவல்
Published on
Updated on
1 min read

டெல்டா வகை கரோனாவைவிட ஒமைக்ரான் வகை 70 மடங்கு அதிக வேகத்தில் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், டெல்டாவைவிட மிகவும் குறைவான உடல் பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறியதாவது:

டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கரோனாக்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், டெல்டாவைவிட 70 மடங்கு வேகத்தில் ஒமைக்ரான் மற்றவா்களுக்குத் தொற்றி, பல்கிப் பெருகுவது தெரிய வந்தது.

இருந்தாலும், அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமைக்ரான் டெல்டாவைவிட மிகக் குறைவாகவே நுரையீரலைத் தாக்குவதும் ஆய்வில் தெரியவந்தது என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

இந்தோனேசியாவில் முதல்முறை: இதற்கிடையே இந்தோனேசியாவில் முதல்முறையாக ஒமைக்ரான் வகைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளா் ஒருவருக்கு அந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது சோதனையில் உறதிசெய்யப்பட்டுள்ளது.

தொற்றுநோய் புள்ளிவிவரங்களை அளிப்பதற்கான ஜிஐஎஸ்ஏஐடி-யின் புள்ளவிவரத்தின் அடிப்படிப்படையில், வியாழக்கிழமை நிலவரப்படி உலகம் முழுவதும் 6,951 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com